. » Tamil

Sri Lanka – The latest developments

யுத்தம் முடிந்து ஒருவருடம் கடந்த பின்னரும் நாம் ஒரே இடத்திலேயே இன்னும் இருக்கிறோம்
யுத்தம் முடிந்து ஒருவருடம் கடந்த பின்னரும் நாம் ஒரே இடத்திலேயே இன்னும் இருக்கிறோம்.

சுனந்ததேசப்பிரிய‐

யுத்தத்தின் பின்னர் ஒருவருடம் கடந்துள்ள நிலையில் இலங்கையின் வடக்கின் யுத்த களத்தின் தற்போதைய நிலைகள் என்ன என்பது குறித்து தேசிய ரீதியாக மாத்திரமல்லாது சர்வதேச ரீதியாகவும் உன்னிப்பான அவதானத்திற்கு உள்ளாகியிருப்பதை கடந்த மாதத்தில் காண முடிந்தது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் அடிப்படை நோக்கமும் யுத்தத்தின் பின்னர் இலங்கையின் நிலைமை சம்பந்தமாகவே அமைந்திருந்தது. அண்மையில் சர்வதேச தூதுக்குழுவினர் பலர் இலங்கைக்கு வந்தனர். யுத்தத்தின் பின்னர் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் தொடர்பாக புதுடில்லி முதல் ஐரோப்பா வரை பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எனினும், இலங்கையில் சகல தரப்பினரும் கலந்துகொள்ளும் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை. இப்படியான பேச்சுக்கு மேடையாக அமைய வேண்டிய ஊடகங்களும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

சர்வதேச ரீதியில் பகிரங்கமாகவும், இலங்கையில் ஓரளவு ஆங்கில மொழி ஊடாக இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எனினும், இவை அதிகார ஊடகங்களுக்குள் இடம்பெறவில்லை. இணையத்தள ஊடகங்களிலேயே இந்தக் கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டன. வடக்கின் யுத்த பூமியில் தற்போது காணக்கூடிய சுவிசேசமான அடையாளங்கள் என்ன? யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் யுத்தம் புரிந்த இரு தரப்பினராலும் பொதுமக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் என்ன? முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் என்ன? அந்த மக்கள் எவ்வாறு தற்போது வாழ்ந்து வருகின்றனர்? அவர்களின் அடிப்படை கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்ன? அமைதி மற்றும் சகவாழ்வை ஏற்படுத்த இலங்கை மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன? போன்ற விடயங்கள் இந்தக் கலந்துரையாடல்களில் முக்கியத்துவம் பெற்றன. கவலைக்குரிய விடயம் என்னவெனில், இலங்கை மக்களுக்கு இந்தக் கலந்துரையாடல்கள் முற்றாக மறைக்கப்பட்டதாகும்.

உதாரணமாக ஒன்றை எடுத்துக்கொண்டால், ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் இலங்கையில் பாரதூரமான மனித உரிமைகள் ஏற்பட்டுள்ளதாக கூறினர். அரசாங்கத்தின் சார்பில் பதிலளித்த சட்டமா அதிபர் அந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார். இந்த நிராகரிப்பு கதைகள் அனைத்தும் இலங்கை மக்களுக்கு சிங்கள மொழியில் அறிந்துகொள்ள முடிந்தது.

தற்போதைய சட்டமா அதிபருக்கு முன்னர் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சட்டமா அதிபர் தற்போது யுத்தத்திற்கு அடிப்படையாக அமைந்த விடயங்களை ஆராயும் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் அப்போது மனித உரிமை ஆணைக்குழுவின் முன் இலங்கையில் எவ்வித மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை எனவும் அதற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டியதில்லை எனவும் கூறியிருந்தார். மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களிலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் தொழில் ரீதியான அதிகாரி ஒருவரின் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு மூலம் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான உண்மை வெளிவரும் என்பதை நம்பமுடியாது என்ற கேள்வி மனித உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டது.

யுத்தம் முடிவடைந்து ஒருவருடத்தின் முன்னர் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத் தொடரில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மாத்திரமல்லாது சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கைகளையும், இலங்கை மக்கள் வாசிக்கவோ அதனை கேட்கவோ சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டு அறிக்கைகள் அல்லது விமர்சனங்கள் இருக்கின்றது என்பதை அரசாங்கம் அவற்றுக்கெதிராக தெரிவிக்கும் கருத்துக்கள் மூலமே அறிந்துகொள்ள முடிகிறது. இலங்கை ஊடகங்கள் இப்படியான அறிக்கைகளைத் தற்போது வெளியிடுவதில்லை. இது மியன்மார் மற்றும் ஈரான் ஊடகங்கள் கைகொள்ளும் நடைமுறையாகும். அந்த நாடுகளின் மக்கள் தமது ஆட்சியாளர்களுக்கு எதிராக சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் அந்நாட்டு அரசாங்கம் அதனை முற்றும் முழுதான பொய்யென அரச ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் மூலமே அறிந்துகொள்ள முடியும்.

ஜனநாயக சமூகத்தில் முக்கியமான நபர் நாட்டின் குடிமகனாவார். சமூக ஜனநாயகம் நாட்டு குடிமக்கள் தெளிவுபடுத்தப்பட்டால் மாத்திரமே பாதுகாக்கப்படும். தகவல் அறிந்துகொள்ளும் உரிமை மிகமுக்கியமான உரிமை என மனித உரிமை சாசனங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பதால் தமது நாட்டின் அரசாங்கம், எதிர்க்கட்சி, இராணுவம், ஆயுத அமைப்புகள் போன்ற எந்த தரப்பினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அல்லது கெட்ட செய்திகளை ஆராய்வதும், அதனை அறிந்துகொள்வதும் மக்களுக்கு இருக்கவேண்டிய உரிமைகளாகும். அதுகுறித்து தெளிவான தீர்மானமொன்றை எடுக்க அந்த மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே இந்த உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒருநாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கின்றதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் விடயமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டறிந்து அச்சமின்றி அதனை விமர்சிப்பதன் மூலமே அறிந்துகொள்ள முடியும். இதற்கு ஊடகங்கள் தயாரா? அதற்கான அவகாசம் இருக்கின்றதா? என்பதன் அடிப்படையில் இந்த விடயம் தீர்மானிக்கப்படுகிறது. அரசாங்கம் அல்லது ஆயுத அமைப்பொன்றின் தவறான செயற்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தளமொன்றை வழங்க ஊடகங்கள் எந்தளவில் தயாராக இருக்கின்றன என்பதும் முக்கியமாகும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஆணையாளர், இலங்கை தொடர்பாக இவ்வாறு தெரிவித்திருந்தார். கடந்த மே மாதம் இலங்கையின் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஒருவருடம் கழிந்துள்ளது. அந்நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பாரதூரமான விடயங்கள் சம்பந்தமாக மனித உரிமைப் பேரவையில் நடைபெற்ற விசேடக் கூட்டத்தொடரில் இலங்கையினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீளாய்வு செய்யுமாறு நான் மனித உரிமைப் பேரவையிடம் கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கூட்டத்தொடரின் பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளை மீள்குடியேற்றுதல், அவசரகாலச் சட்டவிதிகளில் தளர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிறைவேற்றி நிவாரணங்களை வழங்குதல் போன்ற விடயங்களில் பொதுவான சகவாழ்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அண்மையில், சில விடயங்களை ஆராய்வதற்காக அரசாங்கம் அனுபவங்கள் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஆணைக்குழுவை ஏற்படுத்தியிருக்கிறது. எவ்வாறாயினும், கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், புதிய தகவல்களின் அடிப்படையில், இந்த நோக்கத்தை சிறந்த முறையில் அடைய இலங்கைக்குள்ளும், சர்வதேச ரீதியிலும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக சுயாதீன, சர்வதேச விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்|| என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத கொலைகள் தொடர்பான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன், யுத்த மோதல்களின் இறுதி மாதங்களில் சுமார் 30,000 மக்கள் கொலை செய்யப்பட்டதாகவும் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் பாரதூரமான வகையில் மீறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்ச சர்வதேச விசாரணையொன்றை அவசியமெனத் தெரிவித்தார். இவ்வாறான விசாரணை அத்தியாவசியமானது என்பதற்கான புதிய பல தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஊடக சுதந்திரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தபோது, இலங்கையில் செயற்படும் மனித உரிமை அமைப்பு, மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள், சட்டவிரோதமாக்கப்படும் கவலைக்குரிய நிலைமை அதிகரிகத்து வருவதைக் காணமுடிவதாகக் கூறினார்.

இரகசிய சிறைவைப்புக்கள் தொடர்பாக மனித உரிமை பேரவை முன்வைத்த அறிக்கை இலங்கை குறித்து இவ்வாறு தெரிவித்தது. ஷஷஇலங்கை தொடர்பான இறுதி கண்காணிப்பில் கடத்தல்கள், இரகசிய சிறைவைப்புகள் போன்றவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை தொடர்பாக கவலை வெளியிடப்பட்டது. கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் மாத்திரமல்லாது சித்திரவதைக்கு உட்படுத்துவது தொடர்பாக ஆயுதப் படையினருக்கெதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குகள் முழுமைபெறுவதில்லை எனவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.||

மனித உரிமை ஆணைக்குழுவில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், சுயாதீனமாக பிரச்சினைகளை கண்டறியும் விசாரணை மூலம் மாத்திரமே தேசிய ஐக்கியத்திற்கான வழி ஏற்படும் என்பது ஒன்றியத்தின் நம்பிக்கையாகும். இதன்முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அமைக்கவுள்ள நிபுணர்கள் குழு நியமனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனக்கும் தெரிந்த வகையில் இந்த அறிக்கைகள் அனைத்தும் திரிபுபடுத்தப்படாத வகையில் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. யுத்தத்தின் முடிவில் இலங்கை ஊடகங்கள் எதிர்நோக்கும் நிலைமைகளை அறிந்துகொள்ள இந்த விடயம் மோதுமானதாகும். இலங்கை சம்பந்தமாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிகள் குழு, யுத்தத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நீண்ட அறிக்கைகளை வெளியிட்டன. இந்த அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. இந்த அறிக்கைகளில் என்ன உள்ளக்கப்பட்டிருக்கின்றது என்பதை மக்கள் அறியவில்லை. அரசாங்கத்தின் விமர்சனம் மூலமே அந்த அறிக்கைகள் குறித்து மக்கள் தீர்மானிப்பதற்கான ஒரே வாய்ப்பாக அமைந்துள்ளது.

அரசாங்கத்திற்கு பக்கசார்பாக ஆரம்பிக்கப்பட்ட போதும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சில முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட ஊடக வலையமைப்பொன்று அண்மையில் மூடப்பட்டதுடன் அதன் தலைவர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர். மற்றுமொரு ஆங்கிலப் பத்திரிகையை மூடப்போவதாக அசராங்கத்தின் அதிகாரமிக்க ஒருவர் அச்சுறுத்தியுள்ளார். லங்காநியூஸ்வெப் இணையத்தளம் இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளது. லங்காஈநியூஸ் அமைந்துள்ள கட்டிடத்திலிருந்து அவர்களை வெளியேறுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. சிரச ஊடக வலையமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் அதன் செய்திப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றிய சுசில் கிந்தல்பிட்டிய பிணை மறுக்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். டெய்லிமிரர் ஊடகவியலாளர் கடந்த மே மாதம் 6ம் திகதி மஹரகமயில் வைத்து ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரால் தாக்கப்பட்டார். லங்கா பத்திரிகையின் பெண் ஊடகவியலாளர் மே மாதம் 30ம் திகதி தாக்கப்பட்டார். இந்த ஊடகவியலாளர்கள் தாக்கிய எவருக்கு எதிராகவும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

யுத்தம் முடிந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையில் ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட வன்னியில் சுதந்திரமான ஆய்வொன்றில் ஈடுபட இதுவரை ஊடகவியலாளர்களுக்கோ, ஊடகங்களுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை. யுத்தம் முடிந்து ஒருவருடம் கடந்த பின்னரும் நாம் ஒரே இடத்திலேயே இன்னும் இருக்கிறோம்.

இலங்கை தமிழ் மக்களின் அவலநிலைக்கு விடிவுகாண
srilanka flag

இலங்கை வாழ் தமிழ் மக்களின் அவலநிலைக்கு விடிவுகாண, வழிவகை செய்ய புலம்பெயர் தமிழர்களுள்  சிந்தனையாளர்களின் அவை ஒன்றிற்கான கருவூலப்பத்திரம்.

1. அறிமுகம்.

யுத்தத்தின் பின் இலங்கைவாழ் தமிழரின் நிலைமையும் அவர்களின் எதிர்காலழும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஆதனால் இவ்விடையத்தில் அக்கறை கொண்டுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அறிவாற்ரல் மிக்கோரின் சந்திப்பு ஒன்று அவசியமானது. இந்த அவசியத்தை நிறைவேற்ர ஒர் அவை தேவை. அப்பேர்பட்ட அவையின் நிர்மாணத்தன்மைபற்றி இவ் ஆவணம் முன்கூறமுனைகின்றது. அச்சந்திப்பில் அக்கற்றறிந்தவர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதய நிலையில் உதவ எப்படிப் பங்களிக்கலாம் என்பதை ஆராயமுற்படுவதும் இந்த கருவூலப்பத்திரத்தின் நோக்கமாகும்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களுள் கடந்த கால நிகழ்வுகளின் சரி, பிழை பற்றி விமர்சிப்போர் எம்மத்தியில் உள்ளனர் என்ற நிலையை ஏற்றுக்கொண்டு அப்பேற்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து பக்கச்சார்பற்ற நடுநிலைமையைக் கொண்ட கற்றறிந்த தமிழர்களின் அவை தமிழர்களுக்காக செயற்பட வேண்டியது அவசியம் எனக் கருதப்படுகின்றது.

2.இலக்கு.

இலங்கைத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமியில் சுயகௌரவத்துடனும் ஒரு ஜனநாயக  சமூகத்தில் பிரஜைகள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் கொண்ட ஒரு சமூகம் ஆக வாழ்வதற்கு வழிவகை செய்தல்.

3.நோக்கம்.

1.    ஆரம்ப கட்டமாக ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சகலரையும் பிரதிநிதிப்படுத்தக்கூடிய பக்கச்சார்பற்ற சிந்தனையாளர் அவை ஒன்றை அமைத்தல்.

2.    புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தமிழர்களின் விடயங்கள் பற்றிய கருத்து வேறுபாடற்ற விடயங்களை அடையாளம் காணல்.

3.    அங்கத்தவர்களைப் பிளவு படுத்தக்கூடிய கருத்து வேற்றுமை உள்ள முக்கியமான விடயங்களை வேண்டுமென்றே கலந்துரையாடுவதைத் தவிர்த்துக்கொள்ளல். அவ்வாறு செய்வதன் மூலம் குறித்த கருத்து வேற்றுமை உள்ள விடயங்கள் பற்றிப் பேசுவதில்லை என்பதில் இணக்கம் கொண்ட ஒரு ஐக்கிய அவையை உருவாக்குதல்.

4.    குறித்த அவை தமது இலக்கை அடைவதற்கு சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று குறித்த இடைவேளைகளில் சந்தித்து தமது இலக்கை அடைவதற்கான வழிவகைகளை நிர்ணயித்துக்கொள்ளல்.

5.    மேற்குறித்த இலக்கைக் கொண்ட வேறு அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுதல்.

4. வழிமுறைகள்.

1.    மேலே குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்கு ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் கற்றறிந்த தமிழர்களைக் கொண்ட ஒரு நடுநிலைமையான சிந்தனையாளர் அவை ஒன்றை உருவாக்க ஊக்குவித்தல். இவ்வகையான சிந்தனையாளர் அவை உச்சநிலை சிந்தனையாளர் அமைப்பொன்றிற்கு கருத்தூட்டும் “தளநிலை அமைப்பு” ஆக இருக்கும்.

2.    இவ்வகையான ஒவ்வொரு “தளநிலை சிந்தனையாளர்” அமைப்பும் தெரிவு செய்யப்பட்ட செயற்குழு ஒன்றையும், தலைவர் ஒருவரையும் கொண்டதாக இருக்கும்.

3.    இவ்வகையிலான தளநிலை அமைப்புக்கள் குறித்த இடைவேளைகளில் சந்தித்து சொல்லப்பட்ட இலக்குகளோடு சம்பந்தப்பட்ட விடயங்களைக் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கும்.

4.    அவ்வாறு எடுக்கப்போகும் தீர்மானங்களை தமது பிரதிநிதிகள் மூலம் உச்சநிலை சபைக்கு அதன் அடுத்த கூட்டத்தில் முன்வைக்கும்.

5.    ”தளநிலை சிந்தனையாளர்களின்” செயற்குழுவில் இருந்து 3 உறுப்பினர்கள் ஐரோப்பாவின் உச்சநிலை அமைப்பின் குறித்த நாட்டின் சிந்தனையாளர் குழுவின் பிரதிநிதிகளாக இருப்பர்.

6.    இவ்வகையில் உருவாகும் உச்சநிலை அவை குறித்து இடைவேளைகளில் சந்தித்து அவ்வப்போது எழும் விடயங்களைக் கலந்தரையாடி இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை நிர்ணயிக்கும்.

5. பொதுக்குறிப்புகள்.

இக்கருத்தில் நுட்பங்களை அலசி ஆராய ஏதேனும் ஒரு நடைமுறையில் உள்ள அமைப்பு வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திற்கு இணக்கம் ஏற்படின் அதற்கென ‘கருத்துப் பரிமாற்றப் பட்டறை’ ஒன்றை நடாத்தி இவ் ஆலோசனைகளின் நுட்பங்களை ஆராய்ந்து நிறுவன நடைமுறை ஒழுங்குகளையும் தயாரித்து குறித்த அமைப்புக்களை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:

1.    ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒவ்வொன்றிலும் சகல தமிழர்களுடைய கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படக்கூடிய சிந்தனையாளர்களை ஒன்றிணைத்துக் குழுக்களை அமைக்க முயற்சித்தல். இவ்வகையில் உருவாகும் ஐரோப்பாவின் உச்சநிலை அமைப்பு ஏனைய கண்டங்களில் வாழும் தமிழர்களின் சிந்தனை அமைப்பு அமைய முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2.    குறித்த சிந்தனையாளர் குழுக்களை அமைக்கும் போது தள மட்டத்திலும், உச்ச மட்டத்திலும் இக்குழுக்கள் புலம்பெயர்ந்த தமிழ் பேசுபவர்களுள் போதிய எண்ணிக்கையிலான மகளிரையும் சேர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

3.    இவ் அமைப்புகள் சகலவற்றிலும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பான கடந்த காலத்தில் நடைபெற்ற எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் பேசுவதோ, கலந்துரையாடுவதோ இல்லை என்ற ஒழுங்கு விதியை கடைப்பிடித்தல் வேண்டும். இவ்வாறு ஒழுங்கத்தவறின் எமது நோக்கத்தை அடைவதற்கான செயற்பாடுகளில் பாதகம் ஏற்படும்.

4.    கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல் முதலியவைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ நடத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் தேவைப்படின,; தமிழில் சமகாலத்தில் மொழிபெயர்ப்பதற்கான ஒழுங்குகள் இருத்தல் வேண்டும். கூட்டப்பதிவுகள் ஆங்கிலத்தில் இருந்தால் சர்வதேச தொடர்புகளுக்கு இலகுவாக இருக்கும்.

5.    தேவையேற்படும் தருணத்தில் கருத்துப் பட்டறைக்கோ அல்லது வேறு எந்தக் கூட்டத்திற்கோ அனுபவம் வாய்ந்த சர்வதேச நிபுணர்களைப் பங்கு கொள்ளச் செய்யலாம்.

6.    எத்தறுவாயிலும் எக்கூட்டத்திற்கும் சிறப்பு சொற்பொழிவாற்ற கலாநிதி இயன்மாட்டின், சேர் நைஜல்றொட்றி போன்ற நிபுணர்களை அழைத்துக்கொள்ளலாம்.

(இப்பத்திரத்தில் உள்ளவை ஆக்கியோனின் சிந்தனையே. தேவையேற்படின் கூட்டிணக்கத்தின் மூலம் வேறு கருத்துக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.)

மனித பேரவலத்தை தடுத்து நிறுத்த கோரிக்கை
“ நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன்,  போதிய பராமரிப்பு மற்றும் மருத்துவ  வசதிகளும் இல்லாததொரு சூழ்நிலையில் ஏராளமானவர்கள் காயப்பட்டும் இருக்கின்றனர்……. இரு தரப்பினருக்கும் இடையிலான யுத்தத்தில் பொது மக்கள் அகப்பட்டிருப்பதுடன், அம்புலன்ஸ்கள் வைத்தியசாலைகள் என்பன செல் தாக்குதலுக்குள்ளாகி காயமுற்றவர்களை அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த பல தொண்டு நிறுவன பணியாளர்களும் காயமுற்றிருக்கின்றனர் ”

கடந்த சில மாதங்களாக திரும்ப திரும்ப இடப்பெயர்வுக்குள்ளாகி வருவதுடன், விமான தாக்குதல்கள் மற்றும் எறிகணை தாக்குதல்களிலிருந்து தப்பியோடி, போதிய உணவு  மருத்துவ தங்குமிட வசதிகளின்றி சொல்லொணா துயரங்களை அனுபவித்து வரும் வன்னிப்பகுதி மக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் பற்றிய எமது ஆழ்ந்த கரிசனையையும் நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.

முல்லைத்தீவில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு பொதுமக்களை பலவந்தமாக தங்களுடன் பின்வாங்குமாறு  செய்ததற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பாவார்கள். இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்குமிடையேயான நேரடி யுத்த களமுனைக்கு இடையே இரண்டரை லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளதாக செஞ்சிலுவை சங்கமும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனமும் கணிப்பிட்டுள்ளன. இப்பகுதிகளிலிருந்து வெளியேற முயல்பவர்கள்,   இப் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தும் புலிகளால் கொலை செய்யப்படும் நிலை உள்ளதாக எமக்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ‘ பாதுகாப்பு வலயம்” போதுமானதல்ல.  பாதுகாப்புவலயத்திற்கு தப்பிவந்த பொதுமக்கள் கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆளாகவேண்டிய பேராபத்தை சந்திக்கின்றனர். விடுதலை புலிகள் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையிலிருந்து தம்மீது தாக்குவதால் தான் தாம் பதில் குண்டுத்தாக்குதல்கள் நிகழ்த்துவதாக அரசதரப்பு சொல்கிறது. அரசின் இந்நடவடிக்கை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. எந்த விலை கொடுத்தேனும் தமது யுத்த நிகழ்ச்சி நிரலை கொண்டுசெல்ல முயலும் அரசின் முனைப்பையே இது காட்டுகிறது.  தமிழ் பொதுமக்களின் நலனில் தாங்கள் கரிசனை கொண்டிருக்கிறோம், முல்லைத்தீவில் இருந்து தப்பி வருபவர்கள் மேல் தாங்கள் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு நேரும் பேராபத்தை அறிந்துகொண்டு, யாழ் பேராயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய 25 ஜனவரி 2009 திகதியிட்ட கடிதத்தில் பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறார் :

“விடுதலை புலிகள் பாதுகாப்புவலையங்களில் பொதுமக்கள் மத்தியில் நின்று ராணுவத்தின் மேல் எறிகணைகளையும் குண்டுகளையும் வீசுவதை தவிர்க்குமாறு அவசரமாக வேண்டுகிறோம். இது மென்மேலும் உயிர் இழப்புகளை அதிகரித்து மக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும். பாதுகாப்பு வலையத்தை கண்காணிக்குமாறு நான் இரு தரப்பையும் கண்டிப்பாக வற்புறுத்துகிறேன்”.

விடுதலை புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதும், அவர்கள் தப்பி ஓடாமல் தடுப்பதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததென்பதுடன், சர்வதேச போர் விதிகளை மீறும் செயலுமாகும். ஆனாலும் தனது பிரஜைகள் அனைவரதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது இலங்கை அரசின் தலையாய கடமையாகும். ராணுவ நோக்கங்களை விட மக்களின் பாதுகாப்பே முதன்மை படுத்தப்பட வேண்டியது. அதிகரித்துவரும் பொதுமக்களின் உயிரிழப்புகள், காயப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று மருத்துவ உதவி பெறமுடியாத கையறு நிலை, யுத்தத்தில் சிக்குண்டு பீதியடைந்திருக்கும் பொதுமக்களின் அவலநிலை ஆகியவற்றை இலங்கை அரசு உடனடியாக கவனத்திலெடுத்து அதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

மனித பேரழிவுக்கான நிலை உருவாகியிருப்பதை பற்றி சர்வதேச சமூகம் உணர்ந்திருக்கிறதென்பது அவர்களின் அறிக்கைகளூடாக தெரிய வருகிறது. ஆனாலும் இலங்க அரசின் மீதும் விடுதலை புலிகள் மீதும் தொடர்ந்த அழுத்தத்தை பிரயோகித்து  மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சமுகம் முன்வர வேண்டும்.

எனவே அய்க்கிய நாடுகள், அய்க்கிய நாட்டு அமைப்புகள், இலங்கையில்  மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசுகள், சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் மற்றும், தமிழ் நாடு அரசு ஆகியவற்றிற்கு நாம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம் :. மேலதிகமான நேர்த்தியான பாதுகாப்புவலையங்கள ஏற்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தல்;

. பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற ஏதுவாக பாதுகாப்பு வாசல்களை ஏற்படுத்தி, பாதுகாப்பு வலயங்களுக்கு பொதுமக்கள் சென்றடைவதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் யுத்தத்தை நிறுத்த விடுதலை புலிகளையும் இலங்கை அரசையும் வற்புறுத்தி கோருதல்

. யு.என்.எச்.சீ.ஆர்., செஞ்சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு தங்குதடையற்ற போக்குவரத்து வசதிகள் செய்து அவர்கள் பொதுமக்களுக்கு முழுமையான சேவையை செய்ய அனுமதி வழங்குமாறு கோருதல்

. அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தப்பி வரும் பொதுமக்கள் மேல் அரச படைகளோ ஆயுத குழுக்களோ  மக்களின் உரிமைகளை மீறும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தடுத்தல்

. இலங்கை அரசும் விடுதலை புலிகளும் ஜெனீவா சாசன விதிகளுக்கு அமைவாக பொதுமக்களை நடாத்த வேண்டுமெனவும்,  ராணுவத்தினரோ விடுதலைப்புலி இயக்கத்தினரோ சரணடைந்தாலோ அல்லது கைப்பற்றப்பட்டாலோ போர்க்கைதிகள் சம்பந்தமான சர்வதேச விழுமியங்களை பேணி அவர்களது உயிர்வாழும் உரிமை  மனிதாபிமானமாக நடத்துதல் போன்றவற்றை இருதரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தல்.

ஒப்பம் :

இலங்கை ஜனநாயக ஒன்றியம்

புலம்பெயர்ந்த இலங்கையர்களின் சர்வதேச இணையம்

ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான குழு (ஜ.இ.)

தேனீ – இணைய சஞ்சிகை

உதயம் பத்திரிகை – அவுஸ்திரேலியா

பறை சஞ்சிகை – நோர்வே

உயிர்நிழல் – அரசியல் கலை இலக்கிய தமிழ் சஞ்சிகை, பிரான்ஸ்

உயிர் மெய் – அரசியல் கலை இலக்கிய தமிழ் சஞ்சிகை, நோர்வே

சுதந்திர ஊடகம், நோர்வே  ;

தென் ஆசிய தோழமை கழகம், ஜ.இ.

தென் ஆசிய தோழமை முயற்சி, அமெரிக்கா

வைகறை – கனடா

சிறிலங்கா இஸ்லாமிக் போறம் -யு. கே

சிறிலங்கா சங்கம் ஸ்டுட்கார்ட்-ஜேர்மனி

சிறிலங்கா வட்டம் பேர்ளின் ஜேர்மனி

கனேடிய ஜனநாயக அமைப்பு, கனடா